

தேனி,
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கையடுத்து, சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதையடுத்து, கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
மேலும், நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தேவதானப்பட்டி வனச் சரக அலுவலர் தெரிவித்தார்.