தேனி நகர தி.மு.க. சார்பில்2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தேனி நகர தி.மு.க. சார்பில், அல்லிநகரத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தேனி நகர தி.மு.க. சார்பில்2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Published on

தேனி நகர தி.மு.க. சார்பில், அல்லிநகரத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் நாராயணபாண்டியன் தலைமை தாங்கி பேசினார். நகர நிர்வாகிகள் துரைராஜ், மகாராஜன், நாகராஜ், காந்திமலர், பண்ணைரவி, பவுன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தலைமை கழக பேச்சாளர் கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசு செயல்படுத்திய சாதனைகளை விளக்கி பேசினர். இதில், தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், தி.மு.க. நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com