தேனியில் மழை: வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு

குடிநீர் திட்டங்களுக்காக அணையில் இருந்து 86 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
தேனியில் மழை: வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு
Published on: 

தேனி,

வடகிழக்கு பருவமழை முன்னதாக தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே தேனி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 43.14 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 244 கனஅடி நீர் வருகிறது. அணையில் 1218 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. குடிநீர் திட்டங்களுக்காக 86 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை ஏமாற்றியதால் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே வடகிழக்கு பருவமழை கைகொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com