தேனி: லோயர் கேம்ப்பில் பென்னிகுவிக் மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜேந்திரன்


தேனி: லோயர் கேம்ப்பில் பென்னிகுவிக் மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜேந்திரன்
x

தேனியில் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் மண்டபத்தில் அருங்காட்சியகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை

சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் பேசிய கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. என்.ராமகிருஷ்ணன் (தி.மு.க.), பென்னிகுவிக் வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் லோயர் கேம்ப்பில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா, உணவகம், தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், "இங்கிலாந்து நாட்டிலிருந்து தன் சொத்துக்களை எல்லாம் விற்று முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் அவர்களுக்கு அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான உறுப்பினரின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

1 More update

Next Story