தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தம்பி மீது நில அபகரிப்பு புகார்

தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது
தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தம்பி மீது நில அபகரிப்பு புகார்
Published on

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 59). இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் அவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உள்பட 3 பேர், கொடைக்கானல் வில்பட்டியில் தனது மனைவியின் பெயரில் உள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டு தன்னை மிரட்டுவதாக கூறியிருந்தார்.

பின்னர் முனியாண்டி நிருபர்களிடம் கூறுகையில், "நான் ஏற்கனவே இதுதொடர்பாக புகார்கள் கொடுத்துள்ளேன். அப்போது அ.தி.மு.க. ஆட்சி என்பதால் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு புகார் செய்துள்ளேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com