தேனி: கும்பக்கரை அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி: கும்பக்கரை அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை
Published on

தேனி,

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும்.

தற்போது பெய்துவரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com