தேனி: மேகமலையில் காட்டுத் தீ - பல மணி நேரம் போராடி தீயை அணைத்த வனத்துறையினர்...!

மேகமலை வனப்பகுதில் பற்றிய காட்டுத் தீயை பல மணி நேரம் போராடி வனத்துறையினர் அணைத்தனர்.
தேனி: மேகமலையில் காட்டுத் தீ - பல மணி நேரம் போராடி தீயை அணைத்த வனத்துறையினர்...!
Published on

வருசநாடு,

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை இல்லை. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் வனப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் புற்கள் அனைத்தும் காய்ந்த நிலையில் காணப்படுகிறது.

அதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோம்பைத்தொழு அருகே மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு தீ பரவியது. துரிதமாக செயல்பட்ட வனத்துறையினர் 4 மணி நேரத்தில் காட்டுத் தீயை போராடி அணைத்தனர்.

இந்த நிலையில் நேற்று வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட மணலாற்றுகுடிசை மற்றும் கோம்பைத்தொழு உள்ளிட்ட 2 இடங்களில் காட்டுத் தீ பரவியது. இதனையடுத்து வருசநாடு, மேகமலை வனச்சரகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு தீ பரவிய இடங்களுக்கு சென்று சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் வருசநாடு, மேகமலை, கண்டமனூர் வனத்துறையினர் காட்டு தீ தொடர்பாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com