தவெக - காங்கிரஸ் இடையே கருத்து மோதலா? அமைச்சர் ராஜேஷ்குமார் விளக்கம்

சட்டம் ஒழுங்கு சரியில்லை எனப் பொதுவாக ஓர் அரசின் மீது குற்றம்சாட்டுவது சரியான அணுகுமுறை அல்ல என்று அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.
ராஜேஷ்குமார்
Published on: 

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ராஜேஷ் குமார் திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதுதான் எங்களது கனவு. கட்சியை வளர்த்து வலுப்படுத்துவதே எங்களது நோக்கம். இரண்டு அமைச்சர்கள் கிடைத்து விட்டார்கள் என்பதற்காக நாங்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. ஒவ்வொரு 10 வாக்குச்சாவடிகளுக்கும், ஒரு தலைவர் என்ற அடிப்படையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தவெக - காங்கிரஸ் இடையே எந்தவித கருத்துமோதலும் இல்லை. லஞ்சம், ஊழல் இல்லாத அரசு தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் எங்களது பணி. சட்டம் ஒழுங்கு சரியில்லை எனப் பொதுவாக ஓர் அரசின் மீது குற்றம்சாட்டுவது சரியான அணுகுமுறை அல்ல.சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் கிடையாது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது காங்கிரஸ் கட்சியில் 5 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், இரண்டு பேருக்கு அமைச்சரவையிலும் இடம் கிடைத்துள்ளது. ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத்துறையும், விஸ்வநாதனுக்கு உயர் கல்வித்துறையும் தவெக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com