

நெல்லை,
அன்பில் மகேஷ் மீது அவ்வளவு வழக்குகள்...இன்று நிறைய வீடியோக்கள் வெளியாகியுள்ளன என்று அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.
நெல்லையில், மழை முன்னேற்பாடு நிலவரங்களை அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தற்போதுவரை நான்கு துறைகளில் தணிக்கை நடத்தப்பட்டு தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரைப் பற்றி தற்போது பல விடியோக்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக அரசின் நிதிநிலை மிகச் சிறப்பாக உள்ளது. முந்தைய ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. கல்வி என்பது மிகவும் முக்கியமான துறை. ஆனால், அதிலேயே ரூ.150 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. கல்வித்துறையில் ஊழல் செய்பவர்கள்தான் திமுகவினர். இந்த விவகாரம் அன்பில் மகேஷ் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முந்தைய ஆட்சியைப் போல் அல்லாமல், திட்டங்களில் ஊழலின்றி வெளிப்படைத்தன்மையுடன் நிதி கையாளப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் கடன் வாங்கும் திறன் 21 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கடன் பத்திரங்கள் மூலம் ரூ.40,500 கோடி திரட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் குறைவாகும். அதேபோல், மூலதனச் செலவினத்தைப் பொறுத்தவரை, தேர்தல் நடத்தை விதிகளால் இரண்டு மாதங்கள் பணிகள் பாதிக்கப்பட்ட போதிலும், நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.12,346 கோடி செலவிடப்பட்டு ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.