ஆடியோ விவகாரம் அனைத்தும் உண்மை; அமைச்சர் பதவியிலிருந்து ஜெயக்குமாரை நீக்க வேண்டும்- டிடிவி தினகரன் ஆதரவாளர்

ஜெயக்குமார் பற்றிய ஆடியோ, வீடியோ உள்ளது. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு சொல்லமாட்டோம் என தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறினார்.
ஆடியோ விவகாரம் அனைத்தும் உண்மை; அமைச்சர் பதவியிலிருந்து ஜெயக்குமாரை நீக்க வேண்டும்- டிடிவி தினகரன் ஆதரவாளர்
Published on

சென்னை,

அமைச்சர் ஜெயகுமார் மீதான குற்றச்சாட்டு வாட்ஸ்அப் ஆடியோ குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உரிய ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் குற்றச்சாட்டுகள் எதுவும் கூற மாட்டோம். ஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும். என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் ஜெயக்குமாருக்கு விபரீதமாகி விடும். ஜெயக்குமார் விவகாரம் தொடர்பாக ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.ஜெயக்குமார் எத்தனை பெண்களிடம் தவறிழைத்துள்ளார் என்பதற்கு பட்டியலே உள்ளது.

குரல் தன்னுடையது இல்லை என்றுதான் ஜெயக்குமார் கூறினார். குழந்தை தன்னுடையது இல்லை என்று கூறவில்லை. ஆடியோ வெளியிட்டவர்களை கண்டுபிடித்து தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்.

குழந்தையை அமைச்சர் ஜெயக்குமார் ஏற்றுக் கொண்டு சொத்தில் பங்கு தர வேண்டும்.

ஜெயகுமார் ஆடியோ விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தை தொடர்பாக டிஎன்ஏ சோதனை நடத்தப்பட வேண்டும். பிறப்பு சான்றிதழ் விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாரா?

ஜெயக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டால் சம்மந்தப்பட்ட பெண் புகார் கொடுப்பார். சம்மந்தப்பட்ட பெண் வெளியே வருவதற்கு அஞ்சுகிறார்.

ஆடியோ விவகாரம் அனைத்தும் உண்மை. அமைச்சர் பதவியிலிருந்து ஜெயக்குமாரை நீக்க வேண்டும்.

அபலைப் பெண்ணுக்கு குரல் கொடுப்பதற்காக உண்மையைச் சொல்கிறேன். பாதிக்கப்பட்ட பெண் என்னுடைய பாதுகாப்பில் இல்லை என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com