சபாநாயகர் மீது நம்பிக்கை இருக்கிறது - செங்கோட்டையன் பேட்டி

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 3-வது முறையாக கோரிக்கை வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சபாநாயகர் மீது நம்பிக்கை இருக்கிறது - செங்கோட்டையன் பேட்டி
Published on

சென்னை,

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் மனு அளித்த பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்தோம். ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என 3வது முறையாக கோரிக்கை வைத்துள்ளோம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக சபாநாயகர் கூறியிருக்கிறார். சபாநாயகர் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்றார்.

அடுத்த மாதம் 9-ந்தேதி சட்டமன்றம் கூட இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் சபாநாயகரை சந்தித்து இருக்கைகள் தொடர்பாக வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com