'இந்தியா' கூட்டணியால் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது

‘இந்தியா’ கூட்டணியால் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது
'இந்தியா' கூட்டணியால் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது
Published on

'இந்தியா' கூட்டணியால் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது என்று நாகையில், அமைச்சர் ரகுபதி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

நாகை மாவட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவருமான கவுதமன் தலைமை தாங்கினார். தாட்கோ தலைவர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்த விவர கையேட்டை சார்பு அணிகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கி பேசினார்.

கின்னஸ் சாதனை

அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பின்னால் இருக்கிறோம் என்று காட்டத்தான் சேலத்தில் மாநாடு நடத்தப்படுகிறது.

இந்திய வரலாற்றில் சேலம் மாநாடு கின்னஸ் சாதனை படைக்க உள்ளது. இந்தியா கூட்டணியை பார்த்து பயந்து விநாயகர் சதுர்த்தி விழா அன்று சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆட்சி மாற்றம்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, 'இந்தியா' கூட்டணி அமைவதற்கு முன்பாகவே இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி நீக்கப்பட வேண்டும் என்று முன்னடுத்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். 'இந்தியா' கூட்டணியால் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது. பா.ஜ.க. என்ன நினைக்கிறதோ அதை எல்லாம் நிறைவேற்றி வருகிறது. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு இதற்கு ஒரு முடிவு ஏற்படும். தமிழகத்தில் காலை உணவு திட்டம் பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com