சம்பளம் கொடுக்க காசு இல்லை.. பேனா சிலை வைக்க காசு இருக்கிறது- தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்


சம்பளம் கொடுக்க காசு இல்லை.. பேனா சிலை வைக்க காசு இருக்கிறது- தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்
x

திருமாவளவனுக்கு 6 மாதமாவது துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் முன்னாள் கவர்னரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை. பாதாள சாக்கடைகளில் தூய்மை பணியாளர்கள் விழுந்து இறப்பது தமிழ்நாட்டில் தான் அதிகமாக இருக்கிறது. மதுரையில் விடுதியில் இருந்த மாணவர் மிகக்கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளார். அங்கு சமூக நீதி இல்லையா? செவிலியர்கள் தங்கள் உரிமைகளை கேட்டார்கள் அதை வழங்க மறுத்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றது. சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. அப்படி இருந்தும் தமிழக அரசு திருந்தவில்லை. மக்கள் நலனுக்காக பாடுபடவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்க தொடங்கி இருக்கிறது.

சமூக நீதியை உண்மையாகவே ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்றால், இந்த ஆட்சியில் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்-அமைச்சர் பதவியை திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும். ஜிஎஸ்டியால் பொருட்களின் விலை குறையுதே.. மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்களே என சந்தோஷப்படாமல், அய்யய்யோ விலை குறைஞ்சிடுச்சு.. மக்கள் இனிமேல் பாஜகவிற்கோ அதிமுகவிற்கோ ஓட்டு போட்ருவாங்களோ என இந்தியா கூட்டணியினர் கவலையில் உள்ளனர்.

எப்பொழுதும் பாஜக, அதிமுக என்ன செய்கிறது? டெல்லிக்கு செல்கிறார்களா? எந்தக் காரில் செல்கிறார்கள்? வேறு காரில் போகிறார்களா? ஒரே காரில் போகிறார்களா? என்பதில்தான் கவனமாக இருக்கிறார்கள் திமுகவினர். மக்கள் பிரச்னையை கவனிப்பதில்லை சம்பளம் கொடுக்க காசு இல்லை. ஆனால், பேனா சிலை வைப்பதற்கும், வெளிநாட்டுக்கு செல்வதற்கும் காசு இருக்கிறது. கடுமையான எனது கண்டனங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story