

புதுடெல்லி,
நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வுகள் முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் குறிப்பிடாத நிலையில் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது.