“முதல்-அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை..” - அமைச்சர் நிர்மல் குமார்

திருப்பரங்குன்றத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
“முதல்-அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை..” - அமைச்சர் நிர்மல் குமார்
Published on

மதுரை,

மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சி ஊழல் புகாரில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாநகராட்சி கழிவுநீர் கால்வாய் திட்டங்களை மேம்படுத்த ஆய்வு. மதுரையில் பாதாள சாக்கடை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மதுரையில் மூடப்பட்டுள்ள கல் குவாரிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி செயல்பட்ட கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட நடைமுறையே தொடரும். திருப்பரங்குன்றம் எப்படி அமைதியாக இருந்ததோ, அப்படி தான் இருக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதே தவெக அரசின் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் எந்த மதவாத சக்தியும் தலையிட விடமாட்டோம்.

செய்தியாளர்கள் சந்திப்பு

முதல்-அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை இருப்பை காட்டிக் கொள்வதற்காக சிலர் அவ்வப்போது பேட்டி கொடுத்து ஏதாவது பேசிட்டு போறாங்க. செய்தியாளர்களை சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்றெல்லாம் இல்லை. செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று Benchmark Fix பண்ணாதீங்க. எப்போது தேவையோ அப்போது முதல்வர் செய்தியாளர்களை சந்திப்பார்.. தொடர்ச்சியாக மக்களை சந்தித்து வருகிறார்

செந்தில் பாலாஜி

ஹார்டு டிஸ்க் தொலைந்து போனவுடன் யாருமே கூப்பிடாமல் செந்தில் பாலாஜி ஆஜராகிறார். செந்தில்பாலாஜி சொல்லித்தான் ஹார்டு டிஸ்க் திருடப்பட்டதாக யாராவது சொன்னார்களா..? உடனே அவர் ஆஜராகி ஏன் பதில் சொல்ல வேண்டும். இதற்கு யார் காரணம் என விசாரணை முடிவில் தெரியவரும். அவருக்கு ஏன் அவ்வளவு பயம் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com