இரட்டை இலை சின்னத்திற்கும் வருமான வரி துறை சோதனைக்கும் தொடர்பில்லை: வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

இரட்டை இலை சின்னத்திற்கும் வருமான வரி துறை சோதனைக்கும் தொடர்பில்லை என தஞ்சாவூரில் வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்திற்கும் வருமான வரி துறை சோதனைக்கும் தொடர்பில்லை: வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
Published on

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., வரி கட்டவில்லை எனில் சோதனை நடப்பது இயல்பே என்று பேட்டியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com