மாநாட்டிற்கு காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை; எல்.முருகன் பேட்டி


மாநாட்டிற்கு காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை;  எல்.முருகன் பேட்டி
x

இது ஒரு கட்சி சார்ந்த மாநாடு அல்ல,அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தின் ஆன்மீக வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இன்று அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பாத்த முருக பக்தர்கள் மாநாடு இன்று மாலை 3 மணிக்கு மதுரை கலைஞர் திடலில் நடைபெற உள்ளது. பல லட்சம் மக்கள் இன்று ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட உள்ளனர். இந்த புனித்தருணத்தில் தமிழக முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினும் வீட்டில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாட வேண்டுகிறேன்.இது ஒரு கட்சி சார்ந்த மாநாடு அல்ல என்றும் அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு.

இந்த மண் ஆன்மீக மண் என்பதை உலகுக்கு இது நன்றாக நிரூபிக்கிறது. முருக பக்தர்கள் ஒருங்கிணைவது திருமாவளவன் போன்றவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? வேறு மதங்கள் இப்படி ஒன்று சேர்ந்தால் எதிர்ப்பு தெரிவிக்க துணிவார்களா? மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல் துறையின் ஒத்துழைப்பு இல்லை. சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்திய பிறகும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றார்.

1 More update

Next Story