ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது - அமைச்சர் சிவசங்கர்

ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது ஆதாரமும் கிடையாது - அமைச்சர் சிவசங்கர்
Published on

அரியலூர்,

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஆடித் திருவாதிரை அரசு விழாவில் கலந்துகொண்டு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோவில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள்.

ராமருக்கு 3 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு இருப்பதாக கூறுகிறார்கள்; ஆனால், ராமர் இருந்ததற்கு வரலாறும் கிடையாது, ஆதாரமும் கிடையாது. ராமரை பற்றி பேசுபவர்களே அவதாரம் என்றுதான் குறிப்பிடுவார்கள். அவதாரம் என்றால் பிறக்க முடியாது. கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது. நம்மை மயக்கி, நம்முடைய வரலாற்றை மறைத்து வேறு ஒரு வரலாற்றை உயர்த்தி காட்டுவதற்காகதான் இதையெல்லாம் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com