

சென்னை,
சென்னை கோபாலபுரத்தில் நவீனமயமாக்கப்பட்ட அமுதம் மக்கள் அங்காடியை தமிழக அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விலைவாசி உயர்வு தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் உயர்ந்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் உணவுப் பொருட்கள் பதுக்கல் எதுவும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர் சக்கரபாணி, விளைச்சல் குறைவு காரணமாகவே விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.