விஜய் மாநாட்டில் கருத்தியல் இல்லை - திருமாவளவன் விமர்சனம்


விஜய் மாநாட்டில் கருத்தியல் இல்லை - திருமாவளவன் விமர்சனம்
x
தினத்தந்தி 23 Aug 2025 3:49 PM IST (Updated: 23 Aug 2025 4:04 PM IST)
t-max-icont-min-icon

2026- தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது என்று திருமாவளவன் கூறினார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், "பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது” என்று விமர்சித்தார்.

இந்நிலையில், அதிமுகவை விஜய் விமர்சித்துப் பேசியது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த திருமாவளவன், "அதிமுக தான் அதுகுறித்து பதில் சொல்ல வேண்டும். விஜய் மாநாட்டில் கருத்தியல் இல்லை. 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்த காலம் வேறு; இப்போதுள்ள காலம் வேறு: 2026 தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது

“தமிழக வெற்றிக் கழகம் நடத்திய 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், கொள்கை எதிரியாக பா.ஜ.க.வையும், அரசியல் எதிரியாக தி.மு.க.வையும் அறிவித்துள்ளார். ஏற்கனவே முதல் மாநாட்டிலும் இதை தெரிவித்துள்ளார். இப்போது மீண்டும் இந்த மாநாட்டிலும் இதைப் பேசியுள்ளார். ‘கொள்கை வேறு, அரசியல் வேறு அல்ல’. இதை முதலில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதிலேயே அவர்களுக்கு மிகப் பெரிய குழப்பம் இருப்பதாக தெரிகிறது. கொள்கை இல்லாமல் அரசியல் இல்லை; அரசியல் இல்லாமல் கொள்கை இல்லை. இதை முதலில் அவர்கள் புரிந்து கொண்டு தெளிவு பெற வேண்டும்.

கொள்கை எதிரியாக பா.ஜ.க.வை அறிவித்துள்ள விஜய், அப்படியானால் பா.ஜ.க.வின் அரசியல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்கிறார்களா...? தி.மு.க.வை அரசியல் எதிரியாகச் சொல்வதன் மூலம் தி.மு.க.வின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்களா...? இவ்விரண்டுக்கும் அக்கட்சியின் தலைவர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்.”இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story