வீடு உள்ளிட்ட வரிகள் உயர்வு இல்லை - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கோப்புப்படம்
ஏற்கனவே இருந்த வரிகளை மட்டுமே வாங்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர்,
திருவாரூரில் நேற்று நடந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினோம் என்றார்.
நகராட்சியில் தொழில் உள்ளிட்ட வரிகள் உயர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ஏற்கனவே சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் வரி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வரி உயர்வு கூடாது. ஏற்கனவே இருந்த வரிகளை மட்டுமே வாங்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே குப்பை வரி கிடையாது, வீடு உள்ளிட்ட வரிகள் உயர்வு இல்லை. இதுகுறித்து உரிய முறையில் அரசாணை வெளியிடப்படும் என்றார்.
Related Tags :
Next Story






