'டாஸ்மாக் வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது' - அமைச்சர் முத்துசாமி பேட்டி

மது அருந்துபவர்கள் சட்டவிரோதமாக வேறு இடங்களைத் தேடி சென்றுவிடக் கூடாது என்பதையும் கவனிக்க வேண்டும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
'டாஸ்மாக் வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது' - அமைச்சர் முத்துசாமி பேட்டி
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது;-

"தமிழகத்தில் அண்மையில் 500 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளோம். தெளிவான ஆய்வுகள் மேற்கொள்ளபட்ட பிறகே, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதற்கு மேலும் எந்த கடைகளை எல்லாம் மூட வேண்டும் என்று சொல்கிறார்களோ, அவற்றையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் வியாபாரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.

அதே சமயம் டாஸ்மாக் கடைகளை மூடும்போது, மது அருந்துபவர்கள் சட்டவிரோதமாக வேறு இடங்களைத் தேடி சென்றுவிடக் கூடாது என்பதையும் நாங்கள் கவனிக்க வேண்டியுள்ளது. எனவே இதை பக்குவமாக கையாள வேண்டிய நிலை இருக்கிறது. இதில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com