பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பெரிய கட்சியில் கள ஆய்வு நடக்கும்போது ஒருசில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். போலீஸ் கமிஷனர் அருணை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி டிசம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம். அவரும் உரிய ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. மிகப்பெரிய ஜனநாயக கட்சி. இவ்வளவு பெரிய கட்சியில் கள ஆய்வு நடக்கும்போது ஒருசில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். அது சகோதரர்களுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பவம். சரியாகிவிடும். அதை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சிப்பதற்கு தகுதி இல்லை. அவர்களது கட்சியிலும் இதுபோல சம்பவங்கள் நடந்துள்ளது. தனது முதுகை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.

பணம் கொடுத்து கூட்டணி அமைக்கும் அவசியம் அ.தி.மு.க.வுக்கு இல்லை. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அ.தி.மு.க. பொதுக்குழு மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். இவர்களை தவிர்த்து வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com