த.வெ.க. கொடிக்கும் பகுஜன் சமாஜ் கொடிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை - என்.ஆனந்த் பதில் மனு


த.வெ.க. கொடிக்கும் பகுஜன் சமாஜ் கொடிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை - என்.ஆனந்த் பதில் மனு
x

கோப்புப்படம் 

பகுஜன் சமாஜ் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், "தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. பகுஜன் சமாஜ் கொடியில் இருப்பது ஒற்றை யானை, த.வெ.க. கொடியில் இருப்பது இரட்டை யானை. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. இதனால், வாக்காளர்களுக்கு எந்த வகையிலும் குழப்பம் ஏற்படாது.

த.வெ.க.வின் கொள்கை, கோட்பாடு தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கட்சியின் கொடி உருவாக்கப்பட்டுள்ளது. த.வெ.க. கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல; தமிழகத்தின் கலாசார பெருமை, வரலாற்று பெருமை மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பகுஜன் சமாஜ் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story