திருச்சி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை

திருச்சி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை)தடுப்பூசி முகாம் இல்லை என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை
Published on

திருச்சி,

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசிகளின் கையிருப்புக்கு ஏற்றவாறு தினமும் ஒவ்வொரு முகாம்களிலும் டோக்கன் வினியோகிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தடுப்பூசி வரத்து இல்லாத காரணத்தால் திருச்சி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை)தடுப்பூசி முகாம் இல்லை என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com