“தி.மு.க., கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை” - கனிமொழி

தமிழினத்தின் உரிமை குரலாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
“தி.மு.க., கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை” - கனிமொழி
Published on

சென்னை,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளநிலையில், கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கை பாதையில் தொடர்ந்து முன்னேறிச செல்வோம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது:-

தமிழினத்தின் உரிமைக் குரலாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகம், கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை.

“ஆட்சி வரும், போகும்; அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!” என்ற தலைவர் கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கைப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com