இடைக்கால பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

இடைக்கால பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

வேளாண் பட்ஜெட் என்று விவசாயிகளை ஏமாற்றுகின்ற பட்ஜெட்டை போட்டு உள்ளார்கள் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
Published on

சென்னை,

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு எப்படி காது குத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறோம். 2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 4-ல் ஒரு பங்கைகூட நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளைப் போல இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த மேனாமினுக்கி உரையாகத்தான் இருக்கிறது; உருப்படியாக எதுவும் இல்லை.

அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும். உற்றுப்பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். இதற்கு உதாரணம் இந்த நிதிநிலை அறிக்கை; வரவு செலவு திட்டம் பற்றி உருப்படியாக எதுவும் இல்லை. நிதி நிலைமையை சரிசெய்ய ரகுராம் ராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு தான் கடன் அதிகரித்துள்ளது.

மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.26,000 கோடி குறைந்துள்ளது; மத்திய அரசை குற்றம்சாட்டும் நிதி அமைச்சர் மாநில அரசின் வருவாய் குறைந்தது பற்றி பேசவில்லை. வேளாண் பட்ஜெட் என்று விவசாயிகளை ஏமாற்றுகின்ற பட்ஜெட்டை போட்டு உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com