சோதனை நடத்துவது தப்பு கிடையாது.. உண்மையை மறைப்பது ஏன்? - செல்வப்பெருந்தகை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
சோதனை நடத்துவது தப்பு கிடையாது.. உண்மையை மறைப்பது ஏன்? - செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கடந்த 20 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, சீருடை இல்லாமல் வருமான வரித்துறையினர் என சொல்லிக் கொண்டு, இந்தி பேசும் நபர்கள், தன் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ராகுல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினார்.

ஆனால் "செல்வப்பெருந்தகை சொன்னது போல், அவரது வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை" என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 20-ம் தேதி அன்றோ அல்​லது அதற்கு சமீபத்​திய தேதி​களிலோ செல்​வப்​பெருந்​தகைக்கு எதி​ராக வரு​மான வரித்​துறை​யின​ரால் எந்​த​வித​மான சோதனையோ ஆய்வோ அல்​லது அமலாக்க நடவடிக்​கைகளோ மேற்​கொள்​ளப்​பட​வில்லை, சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள அவரது இல்​லம் உட்பட எந்​தவொரு இடமும், வரு​மானவரித் துறையின் நடவடிக்​கைகளுக்கு உட்​படுத்​தப்​பட​வில்​லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பான முழு ஆதாரங்களை வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேர்தல் நேரத்தில் ஏன் இதுபோன்று அச்சுறுத்த வேண்டும்?. சோதனை நடத்தியதால்தான் ராகுல் காந்தியின் பரப்புரைக்கு என்னால் செல்ல முடியவில்லை?. வீட்டின் வாசலில் இருந்த சிசிடிவியை மட்டும் அணைக்காமல் விட்டதால் இந்த ஆதாரம் கிடைத்தது; சோதனைக்கு வந்த அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரமுகர் படப்பை மனோகரன் வீட்டில் நான் இருந்தபோது சோதனை நடந்தது. சோதனை என்ற பெயரில் மனோகரனின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் சிசிடிவியை அணைத்தன. வீட்டுக்குள் நுழைந்ததும் 'பணம் எங்கே?" எனக் கேட்டு அதிகாரிகள் மிரட்டினர்.

சோதனை செய்யவில்லை என வருமான வரித் துறை அதிகாரிகள் மறுப்பு கூறுகின்றனர். சோதனை நடத்துவது தப்பு கிடையாது.. உண்மையை மறைப்பது ஏன்?. வருமான வரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மே 4-ம் தேதி திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்கள் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com