த.வெ.க. நிகழ்ச்சிகளில் பேனர் கலாசாரம் இருக்க கூடாது: பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தல்

த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வரும் 22-ம் தேதி முதல்-அமைச்சர் விஜய் பிறந்த நாளை நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த்
Published on

சென்னை,

22-ம் தேதி முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள்:

த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வரும் 22-ம் தேதி முதல்-அமைச்சர் விஜய் பிறந்த நாளை நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தல்:

கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். கூட்டத்தில் பேசிய ஆனந்த், 'த.வெ.க. நிகழ்வுகளில் பேனர் கலாசாரம் இருக்கக்கூடாது. பொதுமக்களுக்கு பாதிப்பு இன்றி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்' என்று அறிவுறுத்தினார். மேலும் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற இப்போதே பணிகளை தொடங்க வேண்டும் என்றும் நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com