இறந்த மூதாட்டி உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

மானூர் அருகே இறந்த மூதாட்டி உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இறந்த மூதாட்டி உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
Published on

மானூர்:

மானூர் அருகே உக்கிரன்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுமனை குடியிருப்பு பகுதியில் பொதுப்பாதை தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை அப்பகுதி வழியாக எடுத்து செல்வதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே உதவி போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வருவாய் துறையினர் நில ஆவணங்களை ஆய்வு செய்து, பொதுப்பாதைக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்து அளவிட்டனர். தொடர்ந்து பொதுப்பாதை வழியாக மூதாட்டியின் உடலை எடுத்து சென்று இறுதிச்சடங்கு நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com