மதுபாட்டிலில் தவளை கிடந்ததால் பரபரப்பு

மதுபாட்டிலில் தவளை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுபாட்டிலில் தவளை கிடந்ததால் பரபரப்பு
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள சென்னக்கரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். கூலித்தொழிலாளியான இவர் நேற்று சிறுகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கி குடித்துள்ளார். இருட்டான பகுதியில் அமர்ந்து குடித்தபோது பாட்டிலில் ஏதோ அடைப்பு இருந்திருக்கிறது. உடனடியாக செல்போன் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது மது பாட்டிலில் இறந்த நிலையில் தவளை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து மது பாட்டிலுடன் டாஸ்மாக் கடைக்கு சென்ற வேல்முருகன் அங்கு விற்பனை பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் கூறி முறையிட்டுள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாத டாஸ்மாக் ஊழியர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் இருந்த மது பாட்டிலை பிடுங்கி கீழே வீசி உடைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறுகாம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது பாட்டிலில் தவளை கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com