போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட முயன்றவர்களால் பரபரப்பு

போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட முயன்றவர்களால் பரபரப்பு
Published on

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக் கதிரவன் ஆலோசனையின்பேரில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் விபத்துக்களை குறைக்கும் விதமாக ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிராபானு தலைமையிலான போலீசார் 4 ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், ஆவணங்கள் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் வந்தவர்களை பிடித்து ஆவணங்களை பரிசோதித்து, அறிவுரை வழங்கினர். மேலும் வாகனங்களில் காப்பீடு ஆவணங்கள் இல்லாதவர்களையும், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களையும் மறித்து வழக்குப்பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் போலீஸ் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் போலீஸ் அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்தவர்களை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com