இந்தாண்டில் அதிக மழை இருக்கும்: ராமேசுவரம் கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தில் தகவல்

புதிய நோய் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும் என ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது.
இந்தாண்டில் அதிக மழை இருக்கும்: ராமேசுவரம் கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தில் தகவல்
Published on

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி அருகே பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெரிவிக்கப்பட்ட விவரம் வருமாறு:

மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும். அந்நிய நாடுகளின் முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது. தங்கம், வெள்ளி விலை இன்னும் உச்சத்தை தொடும். மருந்து பொருட்களின் விலை அதிகரிக்க கூடும். நிலக்கரி, இரும்பு, சுரங்கங்கள், பெட்ரோலிய கிணறு போன்றவற்றில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.

ரத்தம் சம்பந்தப்பட்ட புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும். இந்த ஆண்டு மழை அதிகமாகவே இருக்கும். விளையாட்டு துறையில் இந்தியா தங்கப்பதக்கம் பெறும், என்பன போன்ற பல்வேறு தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com