

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 119-ஆவது ஜெயந்தி மற்றும் 64-ஆவது குருபூஜையில் முதல் அமைச்சர் விஜய் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64-ஆவது குருபூஜை, வருகிற அக். 30 ஆம் தேதியில் பசும்பொன்னில் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேவர் குரு பூஜை விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில், முதல் அமைச்சர் விஜய்யும் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் வருகைக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்திலும் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரிலும் முதல் அமைச்சர் விஜய் பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. பசும்பொன்னில் விஜய் வந்திறங்குவதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளமும், இரும்புத் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.