தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல் அமைச்சர் விஜய் மரியாதை

தேவர் குரு பூஜையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவது வழக்கம்.
 தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல் அமைச்சர் விஜய் மரியாதை
Published on: 

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வருகிறது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மூத்த அமைச்சர்களும் மரியாதை

இந்த விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன் ஆகியோரும் தேவர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முதல் அமைச்சர் விஜய் வருகை தருவதை அறிந்து அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்ற முதல் அமைச்சர் விஜய், பின்னர் தனது காரில் ஏறி தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார். முதல் அமைச்சர் விஜய் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

பசும்பொன் செல்லாது ஏன்?

முன்னதாக முதல் அமைச்சர் விஜய், தேவர் ஜெயந்தி விழாவுக்கு பசும்பொன் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.ஆனால், அவரது பயண திட்டம் திடீரென மாற்றப்பட்டது. பசும்பொன்னில், ஆண்டுதோறும் தேவர் குருபூஜை நிகழ்வில், லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது வழக்கம்.

அங்கு முதல்-அமைச்சர் செல்லும் போது, கூட்டம் அதிகமாகி, பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும். எனவே, பசும்பொன் பயணத்தை தவிர்க்குமாறு, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாகவும், உளவுத்துறையும் அதே ஆலோசனையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன்பிறகே, பசும்பொன் பயணத்தை முதல்-அமைச்சர் விஜய் தவிர்த்தாக தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

X