

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப் பாளையம் பகுதியில் உள்ள தேவரின் உருவ சிலைக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதனையொட்டி, மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேவர் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் எம்.எம். லாட்ஜ் சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு மற்றும் மீனாட்சி கல்லூரி தரைப்பாலம் சந்திப்பு ஆகிய சாலைகளில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்பிற்கு செல்ல அனுமதி இல்லை
நத்தம் பாலத்தில் மாரணி சந்திப்பிலிருந்து திருப்பாலை சந்திப்பு வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். கோகலே ரோட்டிலிருந்து நத்தம் பாலம் வழியாக வழக்கம் போல் செல்லலாம். அழகர்கோவில் சாலை கருப்பண்ணசாமி கோவில் சந்திப்பிலிருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாலத்தில் செல்ல அனுமதி இல்லை. ஏ.வி.பாலத்தில் வழக்கம்போல் செல்லலாம்.
லாரிகள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் காலை 6 மணிமுதல் இரவு 10.30 மணிவரை நகருக்குள் நுழைய தடை செய்யப்படுகிறது. மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியார் பஸ் நிலையம் மற்றும் ஆரப்பாளையம் செல்லும் நகர பஸ்கள் மற்றும் புறநகர் பஸ் அனைத்தும் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை பாலம் வழியாக காமராஜர் சாலை, முனிச்சாலை சந்திப்பு சென்று பெரியார் பஸ் நிலையம் செல்லக்கூடிய பஸ்கள் அனைத்தும் 144 சந்திப்பு மற்றும் செயின்ட் மேரீஸ் சந் திப்பு வழியாகவும், ஆரப்பாளையம் செல்லும் நகர பஸ்கள் முனிச்சாலை சந் திப்பிலிருந்து முனிச்சாலை ரோடு வழியாக அம்சவள்ளி சந்திப்பு சென்று வலது புறம் திரும்பி யானைக்கல் வடக்குமாரட்வீதி வழியாக செல்லவேண்டும். மாட்டுத் தாவணி பஸ் நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வழியாக ஆரப்பாளையம் செல்லும் புறநகர் பஸ்கள் அனைத்தும் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, வைகை வடகரை சாலை வழியாக கபடி ரவுண்டானா சென்று தத்தனேரி பாலம் வழியாக செல்லவேண்டும்.
நத்தம் மற்றும் அழகர்கோவில் சாலையிலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியார் மற்றும் ஆரப்பாளையம் செல்லும் நகர பஸ்கள் அனைத்தும் பெரியார் சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா முத்தையா மன்றம், டாக்டர் தங்க ராஜ் சாலை, காந்தி மியூசியம், அண்ணா பஸ் நிலையம், ஆவின் சந்திப்பு குரு விக்காரன் சாலை பாலம் வழியாக காமராஜர் சாலை வழியாக முனிச்சாலை சந் திப்பு சென்று பெரியார் பஸ் நிலையம் செல்லக்கூடிய பஸ் அனைத்தும் 144 சந் திப்பு மற்றும் செயின்ட் மேரீஸ் சந்திப்பு வழியாகவும், ஆரப்பாளையம் செல்லும் நகர பஸ், முனிச்சாலை சந்திப்பிலிருந்து முனிச்சாலை ரோடு வழியாக அம்ச வள்ளி சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல் வடக்குமாரட்வீதி வழி யாக செல்லவேண்டும்.
பெரியார் பஸ் நிலையத்திலிருந்து யானைக்கல் புதுப்பாலம் வழியாக நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை மற்றும் மேலூர் சாலைகளுக்கு செல்லக்கூடிய அரசு பஸ் அனைத்தும் வழக்கம் போல் எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, எப்.எப். ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், கோகலே ரோடு வழியாக செல்ல வேண்டும். எம்.எம். லாட்ஜ் சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக அண்ணா பஸ் நிலையம் செல்லக்கூடிய நகர பஸ்கள் எம்.எம். லாட்ஜ் சந்திப்பி லிருந்து இடதுபுறம் திரும்பி, எப்.எப்..ரோடு, கோகலே ரோடு, ராஜா முத்தையா மன்றம் சென்று டாக்டர் தங்கராஜ் சாலை வழியாக செல்லலாம்
சமயநல்லூர் மார்க்கமாக வந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்லக்கூடிய புறநகர் பஸ் மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்லும் புறநகர் பஸ்கள் மற்றும் நகர் பஸ்கள் அனைத்தும் வைகை தென்கரை வழியாக குரு தியேட்டர் சந்திப்பு சென்று பாத்திமா கல்லூரி சந்திப்பு, கூடல்புதூர் பாலம் வழியாக அலங்காநல்லூர் ரோட்டில் சென்று வானொலி நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஆனையூர், பனங்காடி, ஐயர்பங்களா சந்திப்பு, மூன்று மாவடி சந்திப்பு, சர்வேயர் காலனி சந்திப்பு மற் றும் 120 அடி ரோடு வழியாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்லலாம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.