வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

சங்கரன்கோவில் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு நடந்தது.
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on: 

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே பருவக்குடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 53). விவசாயியான இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 2 வீடுகள் உள்ளன. சம்பவத்தன்று இவர் தனது பழைய வீட்டில் சாப்பிட்டு விட்டு, இரவில் புதிய வீட்டுக்கு சென்று தூங்கினார். எனவே பழைய வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் நைசாக அந்த வீட்டின் கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ.8 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

மறுநாள் காலையில் ராமச்சந்திரன் தனது பழைய வீட்டுக்கு சென்றபோது, அங்கு நகை, பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com