

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைமலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பேசாதவனை தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனை தூக்கி எறிகிறார்கள். அதிகாரம் வலிமையானது; ஆனால் நிலையானது அல்ல. 7அடி நீளம் தாண்ட 70அடி பின்னே போக வேண்டியுள்ளது. எளிதாக கிடைக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பு கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மக்கள் நம்மை தேடி வருவார்கள். தோல்வி என்பது நமக்கு இல்லை. வெற்றி ஒன்றே நமக்கு எல்லை.
நல்ல வேலை என்னை தோற்கடித்து உள்ள வர விடாமல் விட்டு விட்டீர்கள்..நான் மட்டும் உள்ளே போயிருந்தேன்.. அவ்வளவு பேரும் வெளியேதான் இருந்து இருக்கனும். நல்ல வேலையா தப்பிச்சிட்டீங்க.. என் மேல பாவம் பார்த்தாங்களா..இல்லை உங்க மேல பாவம் பார்த்து போட்டாய்ங்களா என தெரியவில்லை. முதல் அமைச்சர் ஆன பிறகுதான் அவருக்கு கடன் இருப்பதே தெரிகிறது. அந்த 6 சிலிண்டர் எப்படி தர்றீங்கனு பாக்குறேன்”இவ்வாறு அவர் கூறினார்.