‘கிண்டல் செய்தார்கள், சாதித்து இருக்கிறோம்’ நிர்மலா சீதாராமன் பேச்சு

நாட்டுக்காக செய்கிறோம், எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
‘கிண்டல் செய்தார்கள், சாதித்து இருக்கிறோம்’ நிர்மலா சீதாராமன் பேச்சு
Published on

சென்னை,

சென்னையில் நடந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் குறித்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

இதற்கு முன்பு ஜி.எஸ்.டி.யில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன்னால், மோடி ஏன் இப்படி செய்கிறார். நிர்மலா சீதாராமன் என்ன செய்கிறார், அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜி.எஸ்.டி.யை நடத்த தெரியாது என்று விமர்சனம் செய்தார்கள். அதை நாங்கள் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தோம். அப்படி சொல்லாதீர்கள் என்று நாங்கள் யாரையும் எதிர் மறையாக பேசவில்லை. ஆனால் இவ்வளவு நாளில் மாநில அரசுகளுக்கு பலவிதமான நல்லது நடந்திருக்கிறது.

மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்பதையும் எடுத்து சொன்னேன். அந்த நல்லதுக்கு, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம் என்று யாரும் சொல்லவில்லை. சொல்லாமல் போனால் கூட எனக்கு பரவாயில்லை. நாட்டுக்காக நாம் செய்கிறோம், எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. சொல்லாவிட்டாலும் இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன?.இன்றைக்கு எல்லா உணவு பொருட்களும் 5 சதவீதத்திற்கு வந்து விட்டது, ஜீரோவுக்கு போய் விட்டது. வகைப்பாடு பிரச்சினை இப்போது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com