திருச்சி: பெண்ணிடம் செயின் பறிப்பு..கவரிங் எனத் தெரிந்ததும் ரோட்டில் வீசிச்சென்ற திருடன்

நகை மற்றும் உடைமைகளைப் பறிக்க முயன்ற நபரிடம் இருந்து அந்தப் இளம்பெண் துணிச்சலாக எதிர்த்துப் போராடி, சத்தம் போட்டுள்ளார்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
Published on: 

சென்னை,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராகவேந்திரா கார்டன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு இளைஞர் அந்த பெண்ணின் கழுத்தி அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்தார்.

உடனே சுதாரித்து கொண்ட அந்த பெண் அந்த நபரிடம் கடுமையாக போராடினார். இருந்தாலும் அந்த நபர் அந்த இளம்பெண் அணிந்து இருந்த தாலி செயினை பறித்துக்கொண்டு ஓடினார். சிறிது தூரம் சென்றது அந்த நபர் தான் பறித்த தாலி செயினை பார்த்துள்ளார்.

அப்போது அது கவரிங் என்பதை அறிந்து கடுப்பாகி ரோட்டில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து விரக்தியுடன் சென்றார். இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அதற்காக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com