திருவந்திபுரம்தேவநாதசாமி கோவிலில் தைலக்காப்பு உற்சவம்நாளை தொடங்குகிறது

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் தைலக்காப்பு உற்சவம் நாளை தொடங்குகிறது.
திருவந்திபுரம்தேவநாதசாமி கோவிலில் தைலக்காப்பு உற்சவம்நாளை தொடங்குகிறது
Published on

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 23-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அன்று முதல் ராப்பத்து உற்சவம் தொடங்கி 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தினசரி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தேசிகர் மற்றும் ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜை, சாற்றுமுறை நடைபெற்று வருகிறது. விழாவில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மூலவர் தேவநாதசாமிக்கு தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது. இதையொட்டி இன்று(சனிக் கிழமை) மாலை தேவநாதசாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் நாளை ராஜ அலங்காரம் கலைக்கப்பட்டு மூலவர் தேவநாதசாமிக்கு தைலக்காப்பு சாற்றப்படும். இந்த தைலக்காப்பு சித்திரை மாதம் வரை சாமிக்கு சாற்றப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com