திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
Published on

அன்னவாசல் அருகே வாதிரிப்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த 25-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதி உலாவும், அதனை தொடர்ந்து வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி, திரவுபதி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் சத்திரத்தில் உள்ள குளத்தில் புனித நீராடினர். இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com