‘ஓ மை கடவுளே’ படத்தின் கதாநாயகி வாணி போஜனிடம் பேசுவதாக நினைத்து எனது செல்போனில் பேசி தொல்லை கொடுக்கிறார்கள் - ரியல் எஸ்டேட் அதிபர் பரபரப்பு புகார்

‘ஓ மை கடவுளே’ படத்தின் கதாநாயகி வாணி போஜனிடம் பேசுவதாக நினைத்து பலர் தனது செல்போனில் பேசி தொல்லை கொடுப்பதாக ரியல் எஸ்டேட் அதிபர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
‘ஓ மை கடவுளே’ படத்தின் கதாநாயகி வாணி போஜனிடம் பேசுவதாக நினைத்து எனது செல்போனில் பேசி தொல்லை கொடுக்கிறார்கள் - ரியல் எஸ்டேட் அதிபர் பரபரப்பு புகார்
Published on

சென்னை,

ஓ மை கடவுளே படத்தில் தனது செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தியதால், அந்த செல்போன் எண், படத்தின் கதாநாயகி வாணி போஜனின் செல்போன் எண் என நினைத்து, தன்னிடம் நிறைய பேர் செல்போனில் பேசி தொல்லை கொடுப்பதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புகார் கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் பெயர் பூபாலன் (வயது 48). சென்னை மகாகவிபாரதி நகரைச் சேர்ந்த இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த புகார் மனு விவரம்:-

சமீபத்தில் திரைக்கு வந்த ஓ மை கடவுளே என்ற படத்தில் 98410 22485 என்ற எனது செல்போன் எண் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தின் கதாநாயகி வாணி போஜன் தனது செல்போன் எண் என்று, ஒரு செல்போன் எண்ணை கதாநாயகன் அசோக்செல்வனிடம் கொடுப்பதுபோல ஒரு காட்சி வருகிறது. வாணி போஜன் கொடுத்த செல்போன் எண் எனது செல்போன் எண்ணாகும். எனது செல்போன் எண்ணை ஏன் படத்தில் பயன்படுத்தினார்கள்? என்று தெரியவில்லை.

ஓ மை கடவுளே படத்தை பார்த்தவர்கள், வாணி போஜன் சொன்ன செல்போன் எண், அவரது உண்மையான செல்போன் எண் என்று கருதி, எனது செல்போன் எண்ணுக்கு தப்பான முறையில் பேசுகிறார்கள். தினமும் நிறைய பேர் என்னிடம் இதுபோல் பேசி தொல்லை கொடுக்கிறார்கள். வாணிபோஜனின் செல்போன் எண் இதுவல்ல ,என்று நான் சொன்னாலும் யாரும் கேட்பதில்லை. என்னை திட்டி தீர்க்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காணவேண்டும்.

ஓ மை கடவுளே படக்காட்சியில் இடம்பெற்றுள்ள எனது செல்போன் எண்ணை உடனே நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com