திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி 3-வது நாள் விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி 3-வது நாள் விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா கடந்த 4 ஆம் தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. நேற்றைய தினம் திருவிழாவின் 2-வது நாளில், கோவில் உட்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருவிழாவின் 3-வது நாளான இன்று ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதணை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளிய ஜெயந்திநாதர், கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com