திருச்செந்தூர் கோவில் உண்டியலில் ரூ.3.39 கோடி வருவாய்; 724 கிராம் தங்கம் கிடைத்தது


திருச்செந்தூர் கோவில் உண்டியலில் ரூ.3.39 கோடி வருவாய்; 724 கிராம் தங்கம் கிடைத்தது
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி கோயில் நிர்வாக அலுவலக அரங்கில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்றது. இணை ஆணையர் ராமு முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார், நாகவேல், கண்காணிப்பாளர் ரோகிணி, ஆய்வர் செந்தில்நாயகி, மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் உள்ளிட்டோர் இந்த பணியில் கலந்துகொண்டனர்.

உண்டியல் எண்ணிக்கையில் 3 கோடியே 39 லட்சத்து 56 ஆயிரத்து 353 ரூபாயும் (ரூ.3,39,56,353), தங்கம் 724 கிராம், வெள்ளி 26 கிலோ 340 கிராம், பித்தளை 123 கிலோ 760 கிராம், செம்பு 12.48 கிலோ மற்றும் வெளிநாட்டு பணம் 1408-ம், வெள்ளி காசு மாலை, சுமார் ஒரு அடி உயரம் கொண்ட தங்க வேல் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது. உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி, கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

1 More update

Next Story