சொக்கநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா

விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா நடைபெற்றது.
சொக்கநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா
Published on

விருதுநகரில் பழமை வாய்ந்த மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி பெருந்திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமியும், அம்மனும் ரிஷபம், பூதம், அன்னம், யானை, காமதேனு, நந்தி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று காலை நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருந்த சுவாமி, அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com