திட்டக்குடியில் திருமாவளவன் பிரசாரம்: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த மா.புடையூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் அஜித், வேப்பூரை அடுத்த ஐவதுகுடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
திட்டக்குடியில் திருமாவளவன் பிரசாரம்: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த மா.புடையூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் அஜித் (வயது 19). இவர் வேப்பூரை அடுத்த ஐவதுகுடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் திட்டக்குடியில் தெப்பக்குளம் அருகே நேற்று காலை தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடைபெற இருந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்றார். முன்னதாக கூட்டத்தை பார்ப்பதற்காக மாணவர் அஜித்தும் சென்றுள்ளார்.

வழிநெடுக அந்த பகுதியில் கட்சி கொடிகள் கட்டப்பட்ட இரும்புக்கம்பிகள் நடப்பட்டிருந்தன. இதில் ஒரு கம்பியின் முனை அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் கம்பியின் மேல் உரசியபடி இருந்துள்ளது. இதனை கவனிக்காத அஜித் அந்த இரும்புக் கம்பியை தொட்டுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து அஜித் தூக்கி வீசப்பட்டார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அஜித்தை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்ததும் வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் வேட்பாளர் கணேசன் ஆகியோர் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று அஜித் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com