முதல்-அமைச்சர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு

முதல்-அமைச்சர் விஜய் - திருமாவளவன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு
Published on

சென்னை,

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த தினத்தை முன்னிட்டு விக்கிரவாண்டியில் நேற்று அக்கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, இனி தவெக உடன் விசிக இணைந்து செயல்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யை பார்ப்பதற்காக திருமாவளவன் சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். அவருடன் அமைச்சர் வன்னி அரசுவும் உள்ளார். தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். தவெக உடன் விசிக இணைந்து செயல்படும் என திருமாவளவன் கூறிய பின்னர் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com