திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே நடக்கும் பிரச்சினைக்கு பின்னால் பாஜக இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
Published on

நெல்லை,

நெல்லையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே நடக்கும் பிரச்சினைக்கு பின்னால் பாஜக இல்லை. திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணை வேண்டும். பாஜக - அதிமுக கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதல்-அமைச்சர் நிறைவேற்றவில்லை.

சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 மாத காலத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் வரவிருக்கும் பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com