திருநாகேஸ்வரமுடையார் கோவில் திருவிழா

திருநாகேஸ்வரமுடையார் கோவில் திருவிழா நடைபெற்றது.
திருநாகேஸ்வரமுடையார் கோவில் திருவிழா
Published on

நரிக்குடி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்றது. இதில் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளான சிவபெருமான் மற்றும் அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை பூ உள்ளிட்ட 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து பூப்பல்லக்கில் உற்சவர் முளைப்பாரியுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com